பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2016

ஜெயலலிதாவின் அதிகாரங்கள் யாரிடம் தெரியுமா?

தமிழகத்தின் அரசு நிர்வாகத்தை முதல்வர் அலுவலகத்தில் உள்ள தனிச் செயலாளர்கள் கவனித்து வருவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளித்து வருவதாக அப்பல்லோ மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ள நிலையில் உள்ள ஒருவருக்கு அதிக நேரம் ஓய்வு தேவைப்படும். இதனால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிகம் ஓய்வு தேவைப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓய்வு தேவைப்படும் நிலையில், அரசு நிர்வாகத்தை யார் கவனிக்கிறார்கள் என்ற கேள்வி பலரிடையே எழுந்தது.
தற்போது அதற்கு விடை கிடைக்கும் வகையில், அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், முதல்வர் அலுவலகத்தில் மொத்தம் 4 தனிச் செயலாளர்கள் உள்ளனர். அவர்கள்தான் மொத்தமுள்ள 54 துறைகளின் முக்கிய பணிகளையும் மேற்பார்வையிடுகிறார்கள்.
இந்த தனிச்செயலர்கள், மாநில தலைமைச் செயலாளருக்கும், முதல்வரின் ஆலோசகர், ஷீலா பாலகிருஷ்ணனுக்கும், தகவல் தெரிவிப்பார்கள்.
இவர்கள் தான் தற்போது அரசை வழிநடத்தி செல்லும் பொறுப்பில் உள்ளதாகவும், இவர்கள் அடிக்கடி முதல்வர் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு வந்து பார்த்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்.