பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2016

பிச்சைக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை

கொழும்பின் பிரதான பாதைகளில் காணப்படும், வீதி சமிக்ஞை விளக்கு அமைந்துள்ள பிரதேசத்தில் பிச்சை எடுப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிச்சைக்காரர்களை வைத்து தொழில் புரியும் முதலாளிமார் இருப்பதாக பொலிஸுக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி முதல் இவர்களுக்கான தடைச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் இவ்வாறு பாதையில் இருந்து கொண்டு பிச்சை எடுப்பதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. மட்டுமல்லாது, விபத்துக்களும் ஏற்படுகின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டே இந்த தடை அமுலுக்கு வந்துள்ளது எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறினார்