பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2016

ஆனையிறவு ரயில் நிலையம் இன்று திறந்து வைப்பு


வட பகுதிக்கான ரயில் மாரக்கத்தின் ஆனையிறவு ரயில் நிலையம் இன்று மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த ரயில் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக கல்வியமைச்சு, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து நிதியுதவி கிடைத்ததாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய சகல மாகாணங்களினதும் பங்களிப்பும் ஆணையிறவு ரயில் நிலைய நிர்மாணத்திற்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ரயில் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக சுமார் 22 கோடியே 54 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை பணம் செலவிடப்பட்டுள்ளது.
இதில், ஒரு கோடியே 64 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை பாடசாலை சமூகத்தினர் மற்றும் நலன்விரும்பிகளிடம் இருந்து அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.