பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2016

மிஸ்ரா சுழலில் சுருண்டது நியூஸி: கோப்பை இந்தியா வசமானது

ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியான இன்று 270 ரன்களை இலக்காக நியூஸிலாந்துக்கு நிர்ணயித்தது இந்தியா. எதிர்த்து ஆடவந்த அந்த அணிக்கு தொடக்கம் முதலே சரிவுதான். இடையில் அமித் மிஸ்ரா எய்த சுழல் அஸ்திரத்தில் தனது 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது நியூஸி. இறுதியில் 79 ரன்களுக்கு ஆல்அவுட் செய்து
தொடரை வசமாக்கியது இந்தியா.
இதன்மூலம் 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணியில், அக்சர் பட்டேல் 2 விக்கெட்களையும், உமேஷ் யாதவ், பும்ரா, ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.