பக்கங்கள்

பக்கங்கள்

17 அக்., 2016

நெல்லித்தோப்பில் நாராயணசாமி போட்டி: நெருக்கடி கொடுக்க என்.ஆர். காங்., அதிமுக திட்டம்



புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 2 தொகுதிகளிலும் வென்றன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில் 5 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. 



சட்டமன்றத் தேர்தலில் நாராயணசாமி போட்டியிடாமல் முதல்வர் ஆனதால் அவர் 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு பெற வேண்டும். அப்போதுதான், தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியும். காங்கிரஸ் வென்ற 15 தொகுதிகளில் நெல்லித்தோப்பு தொகுதியில்தான் அதன் வேட்பாளர் ஜான்குமார் அதிகமாக 12,004 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். நெல்லித்தோப்பு தொகுதியில் திமுகவுக்கும் ஓரளவு செல்வாக்கு உள்ளது. இதனால், தான் போட்டியிடுவதற்கு மிகவும் பாதுகாப்பான தொகுதி நெல்லித்தோப்பு என முதல்வர் நாராயணசாமி முடிவு செய்தார். ஜான்குமார் எம்எல்ஏவும் முதல்வர் போட்டியிட ஏதுவாக பதவி விலகினார்.

முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் நெல்லித்தோப்பில் போட்டியிடும் என்றும், அதிமுக தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் அல்லது அவரது மகன் போட்டியிடக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இடைத் தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் அங்கு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் வெற்றிப் பெற்ற விவரம்

காங்கிரஸ் 15
என்.ஆர்.காங்கிரஸ் 8
அதிமுக 4
திமுக 2
சுயேட்சை 1 (மாகே தொகுதியில் டாக்டர் ராமச்சந்திரன் )