பக்கங்கள்

பக்கங்கள்

14 அக்., 2016

கிளிநொச்சியில் வர்த்தகர் கடத்தல் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிளிநொச்சி நகரில்  நேற்றுமுன்தினம் கடத்திச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் கி.ரதீஸனின் மனைவி சர்மிளா ரதீஸன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

யாழ்ப்பாணம் - இடைக்குறிச்சி - வரணியை சேர்ந்த 35 வயதுடைய வர்த்தகரான கி.ரதீஸன் கிளிநொச்சி நகரில் வைத்து நேற்று முன்தினம் நண்பகல் இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார்.

குறித்த வர்த்தகர் தனது வீட்டில் இருந்து கிளிநொச்சியில் உள்ள அவரது அச்சகத்திற்கு சென்ற நிலையிலேயே இந்தக் கடத்தல்  சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் நேற்றைய தினம் மாலை கடத்தப்பட்டுள்ள இளம் குடும்பஸ்தர் கி.ரதீஸனின் மனைவி சர்மிளா ரதீஸன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.