பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2016

சுவிசர்லாந்தின் அரசியலமைப்பு உருவாக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும்-சம்பந்தன்

மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில், சுவிசர்லாந்தின் அரசியல்யாப்பை அடிப்படையாக கொண்ட அரசியலமைப்பு உருவாக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுவிஸ்லாந்தின் சபாநாயகரை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தர், சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், சுவிஸ்லாந்தில் நடைமுறையிலுள்ள அரசியல்யாப்பு சகல சமூகத்திற்கும் சம உரிமையை வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் அந்த நாடு முன்னேறிச் செல்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே, இலங்கை அரசாங்கமானது முன்னேற்றத்தை எதிர்ப்பார்த்து புதிய அரசியல் யாப்பினைத் தயாரிக்கும் நிலையில், சுவிசர்லாந்தின் அரசியல் யாப்பினை அடிப்படையாகக் கொண்ட ஒரு யாப்பு தயாரிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.