பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2016

யோஷித அவுஸ்ரேலியா செல்வதற்கான விசா நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அவுஸ்திரேலியா  செல்வதற்காக அவுஸ்திரேலிய தூதர கத்தில் விண்ணப்பித்திருந்த விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடாக பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியமை மற்றும் பாதத்தில் சிகிச்சை பெற வேண்டும் என நீதிமன்றத்தில் கூறிய அடுத்த நாட்களில் மரதன் போட்டி யில் யோஷித கலந்து கொண்டார்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக யோஷித மீது நம்பிக்கை வைக்க முடியாது என்பதால், அவரது விசா நிராகரிக்கப்பட்டு ள்ளதாக தூதரக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி தனக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு முழங்கால் மற்றும் கணுக்காலில் காயம் உள்ளமையினால் வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு அவரது வழக்கறிஞர்கள் ஊடாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைய அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டை விடுவிப்பதற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. எனினும் கடந்த ஒக்டோபர் 02ஆம் திகதி 42 கிலோ மீட்டர் மரதன் போட்டியில் அவர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யோஷித ராஜபக்சவின் காதலியான யோஹானா ரத்வத்தே தற்போது அவுஸ்திரேலியா மெல்பேர்னில் உயர் கல்வி பயின்று வருகி ன்றமை குறிப்பிடத்தக்கது.