பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2016

ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி; ஆன்டி முர்ரே–ராபர்டோ பாடிஸ்டா அகுத் இறுதிப்போட்டிக்கு தகுதி


ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரர் ஜோகோவிச் (செர்பியா), தர வரிசையில் 19–வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாடிஸ்டா அகுத்தும் மோதினர். இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் 19–வது இடத்தில் இருக்கும் ராபர்டோ பாடிஸ்டா 6–4, 6–4 என்ற நேர்செட்டில் முதல் நிலை வீரரான ஜோகோவிச் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு நுழைந்தார். 

அடுத்த மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் உலக தர வரிசையில் 2–ம் நிலை வீரர் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), தர வரிசையில் 32–ம் நிலை வீரர் ஜிலெஸ் சிமோவிடம் (பிரான்ஸ்) போட்டியிட்டார். இப்போட்டியில் ஆன்டி முர்ரே  6–4, 6–3 என்ற நேர்செட்டில் ஜிலெஸ் சிமோவை விழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தார். 

இன்று நடக்க உள்ள இறுதி போட்டியில் முர்ரே–பாடிஸ்டா அகுத் இருவரும் சந்திக்க உள்ளனர்.