பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2016

ஜெ.,வுக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் சிகிச்சை!



முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே, எய்ம்ஸ் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்நானி மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் டிரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகிய டாக்டர்கள் குழுவினரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து  ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

25-வது நாளாக சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல் நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவமனை அடிக்கடி மருத்துவ அறிக்கை வெளியிட்டு வந்தது.  கடந்த 9-ந்தேதிக்கு பிறகு மருத்துவ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் உள்ள பிரபலமான மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து 2 பெண் மருத்துவர்கள் இன்று  அப்பல்லோ வருகிறார்கள். 

இருவரும் பிசியோதெரபி அளிப்பதில் உலகப் புகழ் பெற்றவர்கள். ஜெயலலிதாவுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பற்றி அறிந்து அடுத்த கட்டமாக செய்ய வேண்டிய பயிற்சிகளை வழங்க உள்ளனர்.