பக்கங்கள்

பக்கங்கள்

10 அக்., 2016

ஜெ., கையெழுத்து; அவருடையது தானா: ஆளுநருக்கு சசிகலா புஷ்பா கடிதம்




அதிமுகவுக்கு இணைப்பொதுச்செயலாளர் நியமிக்கவும், அரசை கைப்பற்றவும் சிலர் திட்டமிடுகின்றனர். எனவே, முதல்வர் ஜெயலலிதா எழுதும் கடிதங்களில் உள்ள, கையெழுத்து, அவருடையது தானா என்பதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்' என, கவர்னர், மத்திய உள்துறை அமைச்சர், பிரதமருக்கு, சசிகலா புஷ்பா கடிதம் எழுதி உள்ளார். 

அதில் உள்ள கையெழுத்து, முதல்வருடையது தானா என, சரிபார்க்க வேண்டும். அதன் பின்னே, மத்திய அரசு, கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசிகலா புஷ்பா எழுதி உள்ள கடிதம், அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.