பக்கங்கள்

பக்கங்கள்

6 அக்., 2016

வட மாகாணத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவன் முதலிடம்

unnamedவட மாகாணத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில்  பரீட்சையில்  வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவன் முதலிடம்

கடந்த ஆகஸ்ட்  மாதம் இடம்பெற்ற புலமைபரிசில்பரீட்சையில் தோற்றி   வவுனியா மாவட்டத்தில் 195  புள்ளிகளை பெற்று  கோகுலதாசன் அபிசிகன் முதலிடத்தை பெற்றுகொண்டார்.
மேற்படி மாணவன் தற்போதைய  நிலவரப்படி  வடமாகாணத்தில்  முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அபிசிகனின்  தந்தையான கோகுலதாசன்  மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோர்  மேற்படி பாடசாலையின்  ஆசிரியர்களாவர்.
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இம்முறை  அண்ணளவாக 170   மாணவர்கள்  பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
மேற்படி   மாணவன்   இந்த பெறுபேற்றினை பெற்று கொள்ள தனக்கு வழி காட்டியாக செயல்பட்ட  ஆசிரியர்களுக்கும்    பெற்றோர் மற்றும் சகோதரனுக்கும் தன்னுடன் பரீட்சையில் தோற்றிய சக வகுப்பு தோழர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் மேலும் எதிர்காலத்தில் பொறியியலாளராக  வந்து இந்த  சமூகத்துக்கு சேவையாற்ற விரும்புவதாகவும்  குறிப்பிட்டார்.