பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2016

அர்ஜூன மகேந்திரனின் மருமகனை கைது செய்ய பரிந்துரை

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸை கைதுசெய்யுமாறு கோப் குழு பரிந்துரை செய்துள்ளது.

அத்தோடு, PERPETUAL TREASURES நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு எதிராவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி விவகாரம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த கோப் குழு, இவர்களை கைதுசெய்து குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பரிந்துரைத்துள்ளது.

அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநரராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் அவரது மருமகனது நிறுவனத்திற்கு இலாபம் கிடைக்கும் வகையில் பிணைமுறிகளை ஏலத்தில் விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக கோப் குழு நடத்திய விசாரணைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியினரால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து, நேற்றைய தினம் நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் இருந்து அதன் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.