பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2016

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளோர் விபரம்



மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும், காவிரியில் தமிழத்தின் உரிமையை நிலைநாட்டவும் , காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கவும் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. 

இக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மற்றும் திமுக சார்பில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர்  பங்கேற்றுள்ளனர்.

விவசாய சங்க பிரதிநிதிகளும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பெங்கேற்றுள்ளனர்.