பக்கங்கள்

பக்கங்கள்

6 அக்., 2016

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதி நிதி Rita Izsák-Ndiaye இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்

சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பிலான .

எதிர்வரும் 10ஆம் திகதி இவர் இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் வடக்கு மாகாணம், வட மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன் சிறுபான்மையினத் தலைவர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். மேலும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுவரும் இன நல்லிணக்கம், சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பன தொடர்பிலும் அவர் கவனம் செலுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.