பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2017

திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்!

சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் சிலர், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.


அவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் மா. சுப்பிரமணியன், நந்தகுமார், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேபோல், எம்.ஆர்.கே பிரகாஷ், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மதிய உணவுக்கு பிறகு, இவர்கள் உள்ளே வரும்போது, அவர்களை காவலர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அவர்களை, அவை காவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றினர். இதுவரை 20 திமுக எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.