பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2017

சபாநாயகர் மைக் உடைப்பு: சபாநாயகர் இருக்கையில் திமுக எம்எல்ஏ



திமுக, காங்கரிஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்த மறுப்பு தெரிவித்தார் சபாநாயகர் தனபால். இதனால் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் முன்பு இருக்கும் மேஜை உடைக்கப்பட்டு தலைகீழாக கவிழ்க்கப்பட்டது. புத்தகங்களை கிழித்து எறிந்தனர். சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது. சபாநாயகர் இருக்கை மீது திமுக எம்எல்ஏ ரெங்கநாதன் அமர்ந்தார். சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் முன்பு இருக்கும் மைக்குள் எடுத்து வீசப்பட்டன. எம்எல்ஏ பூங்கோதை, எழும்பூர் ரவிச்சந்திரன் இருக்கை மீது ஏறி நின்று முழக்கமிட்டதாக தகவல்கள் வெளியாகின.