பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2017

காங்கிரஸ் நாளை முடிவு - டுவிட்டரில் திருநாவுக்கரசர் இல்லையென மறுப்பு!

சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், நாளை சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.  

பின்னர் இதை மறுத்தார் திருநாவுக்கரசர்.   தனக்கு டுவிட்டர் கணக்கு ஏதும் இல்லை என்றும், தன் பெயரில் வேறுயாரோ கணக்கு வைத்திருக்கிறார் என்றும், தனக்கு டுவிட்டரில் இயங்கத்தெரியாது என்றும், செல்போனில் மெசேஜ் வந்தால் மட்டும் பார்ப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் திருநாவுக்கரசர்.  

மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டத்தின் முடிவை தலைமைக்கு சொல்லியிருக்கிறோம்.  அங்கிருந்து தகவல் வந்தவுடன் நாளை எங்களது முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.