பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2017

திருநாவுக்கரசர் அதிமுகவில் சேரப்போகிறார் - இளங்கோவன் ஆவேசம்

சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், நாளை சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.  

பின்னர் இதை மறுத்தார் திருநாவுக்கரசர்.   தனக்கு டுவிட்டர் கணக்கு ஏதும் இல்லை என்றும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டத்தின் முடிவை தலைமைக்கு சொல்லியிருக்கிறோம்.  அங்கிருந்து தகவல் வந்தவுடன் நாளை எங்களது முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இது குறித்து, ’’திமுக எடுக்கும் முடிவையே காங்கிரஸ் எடுக்கும் என்று ராகுல்காந்தி கூறினார்.   அப்படியிருக்கையில், திமுக எடுத்த முடிவுதான் எங்களின் முடிவாகவும் இருக்கிறது.  ஆனால், திருநாவுக்கரசர் வேண்டுமென்றே திரித்துக்கூறுகிறார்.  இதுதான் காங்கிரசோட தலைவிதி.

நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் திருநாவுக்கரசர்.  சசிகலாவுக்கு ஆதரவாகவே தொடர்ந்து பேசி வருகிறார்.  அதிமுகவில் திருநாவுக்கரசர் சேருவார் என்றே எனக்கு செய்தி வருகிறது’’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்