பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2017

தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு தமிழ் தலைமைகளின் ஆளுமையற்ற செயற்பாடுகளே காரணம்! - சுமந்திரன்

தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு காரணம், தமிழ் தலைமைகளின் ஆளுமையற்ற செயற்பாடுகள்தான் காரணம் என்பதை, தான் ஏற்றுக்கொள்வதாக
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ். இந்துக் கல்லூரி ஆகியவற்றின் மாணவர்களிடையே கொழும்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற சொல்லாடல் விவாத அரங்கின் நிறைவில் கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளினால் மனித உரிமை பேரவையினால் நாடுகளை கட்டுப்படுத்த முடியாது. ஆனால், மனித உரிமை பேரவையை பயன்படுத்தி எங்களுக்கு பெற்றுக் கொள்ள முடியுமான விடயங்களை பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் கிடைத்த வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தாமல் நாங்கள் கடந்த காலத்தில் தவறிழைத்திருக்கின்றோம். அந்த வகையில் தமிழ் தலைமைகள் ஆளுமை அற்றவையாக செயற்பட்டிருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அதேபோன்று தமிழ் மக்களும் உணர்வோடும் உணர்ச்சியோடும் மட்டும் கடந்த காலத்தில் செயற்பட்டார்கள். எனவே நாங்கள் எமது அபிலாசைகளை அடைய வேண்டுமாயின் எதிர்காலத்தில் உணர்வோடு அறிவு ரீதியாக செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.