பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2018

அசுல பலத்துடன் மகிந்த கட்சி

நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி சுமார் 46 வீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பொதுஜன முன்னணிக்கு 985 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாமிடத்தில் உள்ளது. 30 வீத வாக்குகளைப் பெற்றுள்ள ஐதேக இதுவரை 509 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை பெற்றிருக்கிறது. மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13.5 வீத வாக்குகளுடன் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தக் கட்சிக்கு 252 ஆசனங்களே கிடைத்துள்ளன.

ஜேவிபி 6.3 வீத வாக்குகளுடன், 83 ஆசனங்களைக் கைப்பற்றி அடுத்த நிலையில் உள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இதுவரையில், 4.43 வீத வாக்குகளுடன், 172 ஆசனங்களைக் கைப்பற்றி ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென்பகுதியில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அலையே வீசுவதாக வெளியாகும் தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.