பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2018

யாழ். மாநகரசபையில் கூட்டமைப்பு பெரும்பான்மை வட்டாரங்களில் வெற்றி
யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 10 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐதேகவும், ஈபிடிபியும் தலா ஒவ்வொரு வட்டாரங்களைக் கைப்பற்றியுள்ளன.

விகிதாசார முறையிலான, 18 உறுப்பினர்களின் தெரிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

மாநகர சபையில் தனித்து ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்னமும், 7 ஆசனங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.