பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2018

பிரிகேடியர் பிரியங்கவிடம் விளக்கம் கோரப்படும்! - வெளிவிவகார அமைச்சு

பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் நடவடிக்கையுடன் இலங்கை அரசாங்கம் எவ்வகையிலும் உடன்படவில்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக அவரிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் 70ஆவது சுதந்திரத் தினத்தை புறக்கணித்து நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ கழுத்தில் கையை வைத்து அறுப்பதைப் போன்று சைகை காட்டியுள்ளார். இச்செயற்பாடு உலகலாவிய ரீதியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதோடு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக தற்போது பிரிகேடியர் பிரியங்க கடமையாற்றி வருகின்றார்.