பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2018

முல்லை மண் தந்த வெற்றி கூட்டமைப்புக்கே
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் உள்ள 12 வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 வட்டாரங்களில் வெற்றியைப் பெற்றுள்ளது. சுயேட்சைக் குழு 1 வட்டாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

கரைத்துறைப் பற்றி பிரதேச சபையில், உள்ள 13 வட்டாரங்களில் 9 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது.

இங்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, சுயேட்சைக் குழு, சிறிலங்கா பொதுஜன பெரமுன, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

இங்கு இன்னமும் விகிதாசார உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படவில்லை.