பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2018

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இருவர் பலி

கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்றைய நபர் தொடர்பிலான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்றைய நபர் தொடர்பிலான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்த துப்பாக்கப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டுள்ள நிலையில் , காவற்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.