பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2018

வெளியேறுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி – உடைகிறது கூட்டு அரசு

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேற சிறிலங்கா சுதந்திரக் கட்சி
முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியி்ருந்தனர்.

இந்த நிலையில் ஐதேக தனித்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை அடுத்து, கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலக சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பரந்துபட்ட எதிர்க்கட்சி அணியை வலுப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை, இதுதொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.