பக்கங்கள்

பக்கங்கள்

12 பிப்., 2018

நான் எப்படி பிரதமராக முடியும்? - நாடு திரும்பிய கோத்தா கேள்வி

நான் அமெரிக்க பிரஜை. என்னால் எவ்வாறு பிரதமர் பதவியை வகிக்க முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். அமெரிக்காவில் இருந்து இன்று காலை நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மீண்டும் தேவையென்பதை நாட்டு மக்கள் தேர்தல் மூலம் நிரூபித்துள்ளனர். பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாந்த மக்கள் அன்று ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு செய்த சேவைகளை 3 வருடங்களின் பின்னர் உணர்ந்து இன்று மஹிந்தவின் ஆட்சி நாட்டுக்கு தேவையென்பதை நிரூபித்துள்ளனர். நான் அமெரிக்க பிரஜையென்பதால் எவ்வாறு பிரதமர் பதவியை வகிக்க முடியும். அதை நீங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமே வினவ வேண்டுமென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கேளிக்கையாக பதிலளித்தார்.