பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2018

பரபரப்பான கட்டத்தில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

நாட்டின் அரசியல் குழப்பங்கள் மேலோங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை
10 மணிக்கு கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்து, அதன் பெறுபேறுகள், நாட்டின் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறான நிலையில், நாடாளுமன்றத்தின் இன்றைய நடவடிக்கைகள் தீர்க்கமானதாக இருக்குமென ​எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தின் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை மற்றும் நிலையியற் கட்டளையில் திருத்தம் மேற்கொள்ளல் ஆகிய இரண்டு விடயங்கள் தொடர்பில் விவாதம் நடத்தப்படவேண்டும்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறுகளுக்குப் பின்னரான அரசியல் நிலைமைகளை அவதானிக்கின்ற போது, நாடாளுமன்ற ஆசனங்களில் மாற்றங்கள் ஏற்படலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலையொன்று இன்றுத் திங்கட்கிழமைக்குள் இடம்பெறுமாயின், ஆளும் கட்சியைச் சேர்ந்தர்வர்களில் ஒரு குழுவினர், எதிரணிப் பக்கமும், எதிரணிப் பக்கத்திலிருக்கும் ஒரு குழுவினர், ஆளும் பக்கத்திலும் அமரவேண்டிய நிலைமை ஏற்படும். இவ்வாறான நிலையிலேயே, ஆட்சி மாற்றமொன்றுக்கான பேச்சுகளே இடம்பெறுகின்றன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கான யோசனைகள் வலுப்பெற்றுள்ளன. அதற்கான காய்நகர்த்தல்களே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, ஒன்றிணைந்த எதிரணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு, நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கவுள்ளதாக, ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆகையால், இன்றைய நாடாளுமன்ற அமர்வு, தீர்க்கமானதாக இருக்குமென, அறியமுடிகின்றது