பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2018

வினையாக மாறிய தாய்ப்பால்!! யாழில் சோகம்!!


பிறந்து மூன்று மாதங்களேயான பெண் குழந்தையொன்று, தாய்ப்பால் புரைக்கேறியமையால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.இச் சம்பவம் நேற்று முன்தினம் யாழ். ஆனைக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இது மேலும் தெரியவருவதாவது,வழமை போலவே செவ்வாய்க்கிழமை இரவு தாயார் குறித்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுக் காலை தாயார் குழந்தையை எழுப்பிய போது குழந்தை எந்தவித அசைவுமின்றி இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாகக் குறித்த குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.