பக்கங்கள்

பக்கங்கள்

31 ஆக., 2018

திலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் “புனிதம் காப்போம்” என பதாகைகள்

நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுகொண்டு இருக்கும் இக்கால பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் அமைந்துள்ள பகுதியினை சூழ தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் நினைவாலயத்தின் புனித தன்மை கெடாதவாறு நடந்து கொள்ளுமாறு கோரி மும்மொழிகளிலும் “புனிதம் காப்போம்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபனின் பங்களிப்பில் பதாகைகள் நேற்று முன்தினம் இரவு கட்டப்பட்டன.
அவற்றினை நேற்று வியாழக்கிழமை அதிகாலை 1.32 மணியளவில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பில் வந்த சிவில் உடை தரித்த இருவர் அப்பதாகைகளை அறுத்துக்கொண்டு தங்களது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.குறித்த சம்பவமானது நல்லூர் ஆலய சூழலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளன.
இருப்பினும் மீண்டும் அப்பகுதியில் புதிதாக மும்மொழிகளில் பதாகைகள் கட்டப்பட்டு உள்ளன.இந்நிலையில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் “புனிதம் காப்போம்” என பதாகைகள் கட்டப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.