பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2018

இப்போதைய பரபரப்பு செய்தி வரலாறு திரும்புமா ?பிக்குகளை விரட்டிய முல்லை தமிழர்கள்


புத்தர் சிலையுடன் முல்லைத்தீவுக்குச் சென்ற பிக்குகள் விரட்டியடிப்பு
முல்லைத்தீவு- குருந்தூர் மலைப் பகுதியில்ர்.
புத்தர்சிலை ஒன்றை அமைக்கச் சென்ற பௌத்த பிக்குகளை, குமுழமுனை பிரதேச இளைஞர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு- குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர்சிலை ஒன்றை அமைக்கச் சென்ற பௌத்த பிக்குகளை, குமுழமுனை பிரதேச இளைஞர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

புத்தர் சிலை வைக்க பிக்குகள் வருவதை அறிந்த குமுழமுனை இளைஞர்கள், அதனைத் தடுப்பதற்காக குருந்தூர் மலைக்கு சென்றனர். அதனை அறிந்த பிக்குகள் குழு தப்பி சென்ற போது, தண்ணிமுறிப்பு குளக்கட்டுப் பகுதியில் இளைஞர்கள் வழி மறித்தனர். அங்கு வடமாகாண அமைச்சர் சிவநேசன், உறுப்பினர் ரவிகரன் பிரதேச சபை தவிசாளர் தவராசா பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பிரசன்னமாகினர்.

இதனால் அப் பகுதியில் முறுகல் நிலை தோன்றியது. பிக்குகள் குழு பிரதேச வாசிகளின் எதிர்ப்பினை தாங்க முடியாத நிலையில் பொலிஸாரின் தலையீட்டுடன் அனைத்துப் பொருட்களுடனும் திரும்பிச் சென்றுள்ளனர். குறித்த பிரதேசமான தமிழர்களுடன் வரலாற்றுடன் தொடர்புடையது எனவும் அங்கு பல நூற்றாண்டு காலமாக ஐயனார் ஆலயமொன்று இருந்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.