பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2018

துப்பாக்கிச் சூட்டிற்கு 11 பேர் பலி- அமெரிக்க கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிட டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ‘ட்ரீ ஆப் லைப்’ என்ற யூத வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. வழிபாட்டுக்கு என அப்பகுதியில் மக்கள் கூடியிருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து சரமாரியாக சுட தொடங்கினான்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ராபர்ட் பவர்ஸ் என்பது தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன் வருகிற 31-ந்தேதி வெள்ளை மாளிகை, பொது மைதானங்கள், ராணுவ தளங்கள், கப்படற்படை நிலையங்கள் மற்றும் கப்பல்களில் அமெரிக்க கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.