பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2018

அடுத்த மாதம் 5ஆம் திகதி மஹிந்த தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்

நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
விலகிக் கொள்வதாக இன்று மாலை அறிவித்தது. இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
அடுத்த மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த சந்திப்பு நடக்கவுள்ளது. அன்றைய தினம் ராஜபக்‌ஷ தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்.
தற்போது மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளமையானது சிறிலங்கா  அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருவதாக அவரது தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.