பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2018

மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாய் அடித்துக் கொலை! – ஊரெழுவில் பயங்கரம்

யாழ்ப்பாணம், உரெழு மேற்கு சரஸ்வதி சன சமூக நிலைய பகுதியில் மகனைத் தாக்க முற்பட்டவர்களை
தடுக்க முற்பட்ட தாய், பொல்லு மற்றும் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நேற்றிரவு 08 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டுக்குள் புகுந்த 08 பேர் கொண்ட கும்பலே இந்தக் கொலையைச் செய்துள்ளது. சந்திரராசா விஐயகுமாரி எனும் 58 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது