பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2018

விக்னேஸ்வரன் தலைமையில் விரைவில் மாற்று அரசியல் அணி! – சிவசக்தி ஆனந்தன்

வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்று விரைவில் உருவாக்கப்பட
வுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா சிவபுரத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2015 இல் ஆட்சி மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்தது. எந்த நிபந்தனையும் இல்லாமல் 3 வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். இவை உங்களையும் உங்கள் கட்சிகளையும் பாதுகாப்பதற்காகவா, அல்லது மக்களுக்காக உங்களை அர்ப்பணித்து செயற்படப் போகின்றீர்களா என்ற கேள்வியை கூட்டமைப்பினரிடம் மக்கள் கேட்க வேண்டும்.
மக்கள் விழிப்படையாதவரை ஏமாற்றும் ஒரு கூட்டம் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே இருக்கும். எமது கிராமங்கள் அபிவிருத்தி அடைய வேண்டுமாக இருந்தால் அரசாங்கத்துடன் பேரம் பேசாது எதனையும் சாதிக்க முடியாது. எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த 16 வருடங்களாக மக்களை புறந்தள்ளிவிட்டு சுயநலமாக சென்று கொண்டிருக்கின்றனர். ஆகவே அடுத்தது என்ன தெரிவு என மக்கள் கேட்கலாம்.