பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2018

இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு

வவுனியாவில் இன்று காலை முதல் பல இடங்களின் வீ
தியில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,




இன்று காலை வவுனியா குருமன்காடு, வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, கண்டி வீதிகள் போன்ற பகுதிகளில் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஆவா குழுவினரால் பொதுமக்களுக்கு வவுனியாவில் வீதி ஓரங்களிலிருந்து பொதுமக்களுக்கும் இளம் பெண்களுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தும் இளைஞர்கள், ஜங்ஸ்டார், பைட்டர், கற்குழி போன்ற மைதானத்தில் எமது செயற்பாடுகளுக்குள் உள்வாங்கும் நோக்கத்துடன் விரிவுபடுத்தவதற்கு உள்ளோம். அவர்களைக்காட்டிக்கொடுக்கும் நோக்கில் செயற்படும் மக்களுக்கும் பொலிஸாருக்கும் காட்டிக்கொடுக்கும் நோக்கில் செயற்படும் இளைஞர்களை எச்சரிக்கின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.