பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2018

சிறீலங்காவில் அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

சிறீலங்காவின் அதிபரான சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை
பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதேவேளை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அமெரிக்கா, சிறீலங்காவின்  அனைத்து கட்சிகளும், அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு நடக்குமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும், சிறீலங்கா அரசு மனித உரிமைகள், நாட்டின் சீர்திருத்தம், நீதி, சமரசம் ஆகியவற்றை நிலைநாட்ட வேண்டும் என எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.