பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2018

சிறிலங்கா நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவில்  இடம்பெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக
ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரும் பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நெதர்லாந்து ருமேனியா பிரிட்டன் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் சிறிலங்காவில் இடம்பெற்றும் வரும் விடயங்களை  உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்  என ஐரோப்பிய ஓன்றியம் தெரிவித்துள்ளது.
அனைத்து தரப்பினரையும் அரசமைப்பிற்கு ஏற்ப நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஓன்றியம் வன்முறைகளை தவிர்க்குமாறும் உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஊடக சுதந்திரம் மற்றும் ஸ்தாபனங்களின் சுதந்திரத்தை பின்பற்றுமாறும் ஐரோப்பிய  ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.