பக்கங்கள்

பக்கங்கள்

8 அக்., 2018

சற்றுமுன்னர் விஜயகலா மகேஸ்வரன் கைது வாக்குமூலம் வழங்க சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலகவிசாரணை பிரிவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர்தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் பகிரங்கமாக கூறினார். விஜயகலா மகேஸ்வரனின் இந்த கூற்றானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படுவதாக தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கூற்றின் பின்னர் எழுந்த சர்ச்சையால் அவர் தமது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

வாக்குமூலம் வழங்க சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலகவிசாரணை பிரிவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர்தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் பகிரங்கமாக கூறினார்.
விஜயகலா மகேஸ்வரனின் இந்த கூற்றானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படுவதாக தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கூற்றின் பின்னர் எழுந்த சர்ச்சையால் அவர் தமது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.