பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2018

தலைமன்னார் வரையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

கொழும்பில் இருந்து தலைமன்னார் வரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவை
அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் நிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

இந்த பாதையில் 3 புதிய பாலங்கள் பொருத்தப்படுவதனால் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி முதல் மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரை ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.