பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2018

பாராளுமன்ற பதிவேட்டில் பதியப்பட்டது மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை!

சிறீலங்காப் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக
பாராளுமன்ற பதிவேட்டில் (ஹன்சார்ட்) அறிக்கையில் பதியப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டு புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டது.

இந் நிலையில் இவ்வாறு நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகள் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணியினரால் கொண்டுவரப்பட்டு பெரும்பான்மை காண்பிக்கப்பட்டது.

இவ்வாறு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள ஹன்சார்டில்,“கடந்த 14 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆட்சி அரசியலமைப்பின் 48(2)ஆவது சரத்தின் படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை நியமிக்கப்படாமையினால் இன்று முதல் பிரதமரராகவோ அமைச்சர்களாகவோ பிரதி அமைச்சர்களாகவோ இராஜாங்க அமைச்சர்களாகவோ ஆளுங்கட்சியாகவோ எவரையும் அனுமதிக்க முடியாது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.