பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2018

அனைத்துலக ஆதரவு தேடி இரகசியப் பேச்சுக்களில் ‘மொட்டு’ – அம்பலப்படுத்திய கனேடிய தூதுவர்

சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு இதுவரை அனைத்துலக அங்கீகாரம் கிடைக்காத
நிலையில், சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவர்கள், அனைத்துலக ஆதரவைப் பெறுவதற்கான இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமல் ராஜபக்ச மற்றும் கனடியத் தூதுவருக்கு இடையிலான கீச்சகப் பதிலடிகள் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன அனைத்துலக இராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்புகளை விமர்சிக்கும் வகையில், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கீச்சகப் பதிவு ஒன்றை நேற்று இட்டிருந்தார்.
அதில் அனைத்துலக சமூகத்தைச் சந்திப்பதை விட, பொதுமக்களைச் சந்தித்து, தேர்தலுக்கு தயாராகும்படி கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.