பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2018

வாக்கெடுப்புக்கு வர முடியுமா? – மகிந்த அணிக்கு ரணில் சவால்

நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல்- முடிந்தால் வரும் 29ஆம் நாள், பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை
நிறுத்தும் பிரேரணையைத் தோற்கடிக்குமாறு மகிந்த ராஜபக்ச அணியினருக்கு சவால் விடுழுத்துள்ளார் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
அலரி மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அதனால் தான் அவர்களின் உறுப்பினர்கள்,  வாக்கெடுப்பு நடத்துவதை ஒவ்வொரு முறையும் குழப்பி வருகிறார்கள்.
எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் வரும் 29ஆம் நாள் நாடாளுமன்றத்துக்கு வந்து- பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தும் பிரேரணை மீது வாக்களிக்குமாறு அவர்களிடம் நான் சவால் விடுகிறேன்.
அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டால், அந்தக் கணமே அரசாங்கமோ, அமைச்சரவையோ கிடையாது. எனவே, அந்த செயலகங்களுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டிய தேவை இல்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.