பக்கங்கள்

பக்கங்கள்

25 நவ., 2018

பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற வானிலையின் காரணமாக, இன்று (25) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் சில பிரதேசங்களில் பலத்த
மழை பெய்யக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
இதன்படி மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடகிழக்கு மற்றும் மேல் மாகாணம் ஆகியவற்றில் பலத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மாகாணங்களில்75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையில் கடற்கரை பிரதேசங்களில் பலத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆகையால் கடற்​றொழிலில் ஈடுபடுவோர் மற்றும் மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.