பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2018

வியாழேந்திரனை கூட்டமைப்பில் இருந்து நீக்குமாறு சித்தார்த்தன் பரிந்துரை

  அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு, கட்சி
தாவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை பதவியில் இருந்து நீக்குமாறு, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பரிந்துரைத்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘புளொட் சார்பிலேயே வியாழேந்திரன், கூட்டமைப்பில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவர் புளொட் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வியாழேந்திரன் எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். எனவே, அவரை எமது கட்சியில் இருந்து நீக்க புளொட் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும், அவரை கூட்டமைப்பில் இருந்து நீக்குமாறும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் நாம் கோரியுள்ளோம்.
வியாழேந்திரன் ஒரு ஆசிரியர். அவர் புளொட் போராளி அல்ல. பிரபலம் பெற்ற ஒரு ஆசிரியர் என்ற வகையிலேயே அவரை 2015 பொதுத் தேர்தலில் புளொட் போட்டியில் நிறுத்தியது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.