பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2018

புதிய அரசாங்கத்தில் மேலும் ஐவர் இணைவர்

எதிர்வரும் 14ஆம் திகதியன்று இடம்பெறவுள்ள சபை அமர்வின் போது, பெரும்பான்மையை நிரூபிப்பதில், ஐக்கிய தேசியக் கட்சியே சிக்கலை எதிர்நோக்கவுள்ள
தாகத் தெரிவித்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன, எதிர்வரும் நாள்களில், புதிய அரசாங்கத்தில் மேலும் ஐவர் இணைந்துகொள்வர் என்றும் கூறினார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினால், கொழும்பில் இன்று (05) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ரோஹித்த எம்.பி, நாடாளுமன்ற அமர்வின் போது, ஐக்கிய தேசியக் கட்சியினால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது போகுமென்றார்.