பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2018

நாவற்குழிக் கடலில் மாவீரர்களுக்கு வணக்கம்


கடலில் காவியமான மாவீரர்களை நினைந்து நாவற்குழிக் கடலில் நினைவேந்தல்
இடம்பெற்றது. நாவற்குழியில் உள்ள கடல்நீரேயில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினத்தன்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை கடலில் சுடர் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடற்புலிகள் மற்றும் கரும்புலிகளின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றுவந்தது. 
இன்று மாவீரர்களை நினைவுகூர்ந்து  நாவற்குழியில் இவ்வாறான கடலில் தீபம் ஏற்றும் வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.