பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2018

யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்

தமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம்
அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்த வகையில், இன்றைய தினம் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூரும் வகையில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பல இடங்களில் மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் யாழ். சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜெர்மனியில் இருந்து வந்த தம்பதியினர் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தாமும் சுடரேற்றுவதற்கு அனுமதி தருமாறு கோரியுள்ளனர்.இதை ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அவர்களுக்கு சுரரேற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்