பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2018

யாழ். பருத்தித்துறையில் மாவீரர் தின ஏற்பாடுகளை தடுத்து நிறுத்திய பொலிஸார்

யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் மாவீரர் தின ஏற்பாடுகளை பொலிஸார் தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்களை அங்கிருந்து வி
ரட்டியடித்துள்ளதாக  கூறியுள்ளார்.
இச் சம்பவமானது இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் குறித்த பகுதியில் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அப் பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந் நிலையிலேயே அங்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார் மாவீரர் தின ஏற்பாடுகளை பொலிஸார் தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
மேலும் அங்கு கட்டப்பட்டிருந்த கொடிகளை அறுத்தெறிந்தும், வைக்கப்பட்டிருந்த மாவீரர்களது சிவில் உடையிலான புகைப்படங்களை அப்புறப்படுத்துமாறும் பொது மக்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அப் பகுதியில் இருந்து பொதுமக்களை பொலிஸார் வெளியேற்றியுள்ளனர். இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சுழல் காணப்படுவதுடன் பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.