பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2018

முல்லைத்தீவிலும் வெள்ளப்பெருக்கு, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 1400 குடும்பங்கள் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் மன்னாகண்டல் பிரதேச மக்கள் மன்னாகண்டல் அ.த.க.பாடசாலை, கோம்பாவிலில் பொதுநோக்கு மண்டபம், விசுவமடு ம.வித்தியாலயம் போன்றவற்றில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி குமாரசுவாமிபுரம் பாடசாலையிலும் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு விசுவமடு - மாணிக்கபுரம் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த 112 குடும்பங்களை சேர்ந்த 315 பேர் விசுவமடு பாரதி வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 200 மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

முன்னறிவித்தல் இல்லாமையால் பாதிக்கப்பட்ட மக்கள் மாற்றுடைகளை கூட எடுக்க முடியாமல் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.

இந்த மக்களுக்கு உடனடியாக மாற்று உடைகள், சிறுவர் மற்றும் பெண்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் என்பன தேவைப்படுகின்றன என மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.